Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாளை முதல் மாநகராட்சி முக்கிய பகுதியில் 24 மணி நேரமும் தனியார் மூலம் துப்புரவு பணி

Print PDF

தினகரன்             01.02.2014

நாளை முதல் மாநகராட்சி முக்கிய பகுதியில் 24 மணி நேரமும் தனியார் மூலம் துப்புரவு பணி

திருப்பூர், :மாநகராட்சியில் 2 மற்றும் 3வது மண்டலங்களுக்கு உட்பட்ட 16வது வார்டு முதல் 45வது வார்டு வரை உள்ள 30 வார்டுகளில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு விடப்பட்டுள்ளது. சீனிவாஸ் வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் திருப்பூரில் உள்ள 2 மண்டலங்களில் இந்த பணியை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த 2 மண்டலங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் சேகரமாகும் குப்¬ பகள் தினமும் 600 தள்ளுவண்டிகள் மூலம் சேகரிக்கப்படும்.இந்த ஒவ்வொரு குப்பை தொட்டிகளிலும் ரேடியோ அதிர்வின் அடையாள அட்டை பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து தொட்டிகளின் இருப்பிடம் மற்றும் பிற தகவல்கள் இணையதளம் மூலம் கண்காணிக்க முடியும். தெருக்க¬ ளயும், கழிவுநீர் கால்வாய்களையும் துப்புரவுபடுத்தும் பணியும் தினமும் நடக்கும். மேலும் சாலையோரங்களில் உள்ள புல் போன்ற செடிகள், மண் போன்றவை அவ்வப்போது அப்புறப்படுத்தப்படும்.

இந்த பணிக்காக அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் 781 துப்புரவு பணியாளர்களை தனியார் நிறுவனம் நியமித்து உள்ளது. இந்த பணியாளர்களுக்கு தேவை யான சீருடை பாதுகாப்பு சாதனங்கள் பணிக்கான கருவிகள் போன்றவற்றையும் அவர்களே ஏற்பாடு செய்து கொள்வார்கள்.

இந்த 30 வார்டுகளிலும் 3,200க்கும் மேற்பட்ட தெருக்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த தெருக்களின் நிலையும் தினமும் இணையதளத்தில் கண்காணிக்க முடியும். இந்த பணிக்காக 26 நவீன வாகனங்களை இந்த நிறுவனம் பயன்படுத்த உள்ளது. இந்த வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ்.கருவி பொருத்தப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் கண்காணிக்கப்படும். முக்கிய பகுதிகளான பஸ் நிலையங்கள், மார்க்கெட், மற்றும் பிரதான சாலைகளிலும் ஆட்டோக்கள் மூலம் 24 மணி நேரமும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படும்.

இதுதவிர இந்த தனியார் நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களின் வருகை பதிவேடுகளும் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும். பணியாளர்களின் வருகை பதிவுகள், வாகனங்களின் செயல்பாடுகள், குப்பை தொட்டிகளின் தகவல்கள் போன்ற அனைத்து தகவல்களும், இருந்த இடத்தில் இருந்தே இணையதளம் மூலம் 24 மணி நேரமும் மாநகராட்சி நிர்வாகத்தால் கண்காணிக்கப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் சுகாதாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க தனியார் நிறுவனத்தினர் இலவச தொலை பேசி எண்ணை ஏற்பாடு செய்துள்ளனர்.

பொதுமக்கள் தெரிவிக்கு ம் புகார்களை அவர்கள், ஒரு மணி நேரத்தில் சரி செய்வார்கள். அவ்வாறு சரிசெய்யவில்லை எனில், தனியார் நிறுவனத்தினருக்கு அபராதம் விதிக்கப்படும். குப்பைகள் தனியாரிடம் ஒப்படைக்கும் விழா நாளை (2ம் தேதி) காலை 10.30 மணிக்கு 2வது மண்டலத்துக்கு உட்பட்ட எம்.எஸ்.நகரில் நடைபெறும்.