Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 5.94 லட்சம் நிதி பசுமை பூங்கா அமைக்க அள்ளித்தந்த வள்ளல்கள்

Print PDF

தினகரன்          21.11.2013  

ரூ. 5.94 லட்சம் நிதி பசுமை பூங்கா அமைக்க அள்ளித்தந்த வள்ளல்கள்

திருச்சி,: திருச்சி மாநகராட்சி சார்பில் பஞ்சப் பூர் பசுமை பூங்கா அமைக் கும் திட்டத்தில் மரங்கள் வளர்க்க பசுமை ஆர்வலர் கள் நேற்று வரை 198 பேர் ரூ.5 லட்சத்து 94 ஆயிரம் வைப்பு நிதி  வழங்கியுள்ளனர். ஆர்வம் உள்ளவர் கள் இந்த திட்டத்தில் பங்கேற்க மாநகராட்சி ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.

திருச்சி மாநகராட்சி பொன்மலைக் கோட்டம் பஞ்சப்பூரில் மாநகராட் சிக்கு சொந்தமான 5 ஏக் கர் நிலப் பரப்பில் பசுமை பூங்கா உருவாக்கப்படுகிறது.

இதில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மூலிகை செடிகள், தியான மண்டபம், சிறிய அளவில் விலங்கியல் பூங்கா, ஏழு உலக அதிசயங்களின் மாதிரிகள், சிறுவர்கள் பய ன்படுத்தும் ரயில் வண்டி ஆகியவை அமைக்கப்படுகிறது.

பசுமை திட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பசுமை ஆர்வலர்களிடம் ரூ.3 ஆயிரம் வைப்பு தொகை யாக பெற்றுக் கொண்டு அவர்களின் பெயரில் ஒரு மரம் வளர்த்து மாநகராட்சியால் பராமரிக்கப்படும். இப்பசுமை திட்டத்தில் திருச்சி மகாத்மா காந்தி பள்ளியில்  6ம் வகுப்பு படி க்கும் மாணவி அக் ஷயா திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணியிடம் ரூ.3 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.

பசுமை திட்டத்திற்கு ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ-அபிஷேகபுரம் ஆகிய 4 கோட்டங்களில் இதுவரை மொத்தம் 198 பேர் தங்கள் பெயரில் மரம் வளர்க்க இணைத்துக் கொண்டு ரூ.5 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர். மேலும் பசுமை பூங்காவில் தங்கள் பெயரில் மரம் வளர்க்க ஆர்வம் உள்ளவர் கள் திருச்சி மாநகராட்சி அலுவலர்களை அணுகலாம்.

இதுதொடர்பான விபரங்களை அறிய 76395- 66000 என்கிற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தெரிவித்தார்.