Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீட்­டு­வ­சதி வாரி­யத்தின் 1,224 வாடகை வீடுகள் விரைவில் இடிப்பு புதிய ஒதுக்­கீ­டு­க­ளுக்கு தடை

Print PDF
தினமலர்        07.08.2013

வீட்­டு­வ­சதி வாரி­யத்தின் 1,224 வாடகை வீடுகள் விரைவில் இடிப்பு புதிய ஒதுக்­கீ­டு­க­ளுக்கு தடை


சென்னை :சென்னை சைதாப்­பேட்டை தாடண்டர் நகர், ராயப்­பேட்டை பீட்டர்ஸ் காலனி, லாயிட்ஸ் காலனி ஆகிய இடங்­களில் உள்ள, 1,224 வாடகை குடி­யி­ருப்­பு­களை விரைவில் இடிக்க வீட்­டு­வ­சதி வாரியம் முடிவு செய்­துள்­ளது.

சென்­னையில் பட்­டி­னப்­பாக்கம், பீட்டர்ஸ் சாலை, லாயிட்ஸ் காலனி, அண்ணா நகர் உள்­ளிட்ட பல்­வேறு இடங்­களில் அரசு ஊழி­யர்­க­ளுக்­கான வீட்­டு­வ­சதி வாரிய வாடகை குடி­யி­ருப்­புகள் உள்­ளன.

அறி­விப்பு

அவற்றில், பட்­டி­னப்­பாக்­கத்தில் இருந்த, 1,112 வீடு­களை இடித்து விட்டு, 2,385 வீடு­க­ளுடன் அதிக தளங்கள் கொண்ட புதிய குடி­யி­ருப்பு கட்ட திட்­ட­மி­டப்­­பட்­டது. அந்த திட்டம் இறுதி செய்­யப்­பட்டு விட்டபோதிலும் கட்­டு­மான பணிகள் இன்னும் துவங்­கப்­ப­ட­வில்லை.

இதற்கு அடுத்­த­ப­டி­யாக, 2012 -– 13 நிதி ஆண்டில், சென்­னையில் தாடண்டர் நகர், பீட்டர்ஸ் காலனி, லாயிட்ஸ் காலனி ஆகிய இடங்­களில் உள்ள, 2,522 வாடகை குடி­யி­ருப்­புகள், 1,770 சுய­நிதி குடி­யி­ருப்­புகள் என, மொத்தம், 4,292 வீடுகள் இடிக்­கப்­பட்டு புதிய குடி­யி­ருப்­புகள் கட்­டப்­படும் என, அரசு அறி­வித்­தது.

நட­வ­டிக்கை

அந்த அறி­விப்பு வெளி­யாகி இரண்டு ஆண்­டுகள் ஆகும் நிலையில், இது தொடர்­பான பணிகள் துவங்­கப்­ப­டாமல் உள்­ளன. இதனால், அந்த திட்­டங்கள் செயல்­ப­டுத்­தப்­ப­டுமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

இது குறித்து வீட்­டு­வ­சதி வாரிய உய­ர­தி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:

கடந்த, 2012- –13 நிதி ஆண்டில் அறி­விக்­கப்­பட்ட திட்­டங்­களில் முதல்­கட்­ட­மாக, 1,224 வீடு­களை இடிக்கும் பணிகள் விரைவில் துவங்­கப்­பட உள்­ளன. அவற்றில், தாடண்டர் நகரில், 638 வீடு­களும், பீட்டர்ஸ் கால­னியில், 346 வீடு­களும், லாயிட்ல் கால­னியில், 240 வீடு­களும் இடிக்­கப்­பட உள்­ளன.

அந்த வீடுகள் உள்ள குடி­யி­ருப்­பு­களில் புதி­தாக ஒதுக்­கீடு செய்ய தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த கட்­ட­டங்­களை இடிக்க மாந­க­ராட்­சி­யிடம் அனு­மதி கோரும் நட­வ­டிக்­கைகள் துவங்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வாறு அவர் கூறினார்.