Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திமிரி பேரூராட்சியில் கைத்தறி நெசவாளர் மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்

Print PDF

தினத்தந்தி               01.08.2013

திமிரி பேரூராட்சியில் கைத்தறி நெசவாளர் மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்


திமிரி பேரூராட்சியில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியில் கைத்தறி நெசவாளர்கள் மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேலூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி தலைமை தாங்கி பேசினார். திமிரி பேரூராட்சி தலைவர் எம்.புவனேஸ்வரி, துணைத்தலைவர் டி.ஆர்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் நெசவாளர்கள் பலர் கலந்து கொண்டு, தங்களின் முக்கிய கோரிக்கைகளான சங்கம் அமைத்தல், கடன் உதவி வழங்குதல், நெசவாளர்களின் பிள்ளைகளின் படிப்பிற்கு சலுகைகள், நலிந்த நெசவாளர் குடும்பத்திற்கு வீடு என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அதைத்தொடர்ந்து நெசவாளர்களிடம், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் நெசவாளர்களின் கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தொழில் மேம்பட வழிவகை செய்யப்படும் என தெரிவித்து பேசினார். கூட்டத்தில் நெசவாளர்கள் உள்பட பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.