Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசைகளை கான்கிரீட் வீடாக்க வாய்ப்பு

Print PDF

தினமணி             11.07.2013

குடிசைகளை  கான்கிரீட் வீடாக்க வாய்ப்பு

கோவை மாநகராட்சிப் பகுதியில் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற விண்ணப்பம் பெறுவதற்கான சிறப்பு முகாம் வரும் 15-ஆம் தேதி நடைபெறுகிறது.

 இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் க.லதா புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

 கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்படும் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் குடிசைகள் மற்றும் ஓட்டு வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

 இதுவரை இத்திட்டத்தின் கீழ் பயனடையாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 நிலத்தின் பட்டா மற்றும் பத்திர நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், பட்டாதாரர் இறந்திருந்தால் அவரது வாரிசுகளுக்கான சான்றிதழ்கள் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும்.

 கிழக்கு மண்டல அலுவலகத்தில் வரும் 15-ஆம் தேதி, வடக்கில் 16, தெற்கில் 17, மேற்கில் 18, மத்திய மண்டல அலுவலகத்தில் வரும் 19-ஆம் தேதிகளில் முகாம் நடைபெற உள்ளது.

 மேற்கண்ட முகாம்களில் மக்கள் பங்கேற்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து மத்திய, மாநில அரசின் மானியங்களைப் பெற்று குடிசைகள் மற்றும் ஓட்டு வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றிக் கொள்ளலாம்.