Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருத்தங்கலில் ரூ. 3.69 கோடியில் புதிய பஸ் நிலையம்

Print PDF

தினமணி                28.06.2013

திருத்தங்கலில் ரூ. 3.69 கோடியில் புதிய பஸ் நிலையம் 

திருத்தங்கலில் ரூ. 3.69 கோடியில் புதிய பஸ் நிலையம்  திருத்தங்கல் நகராட்சியில் ரூ. 3.69 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக நகர்மன்றத் தலைவர் தனலட்சுமி கணேசமூர்த்தி, துணைத் தலைவர் பொ.சக்திவேல் ஆகியோர் தெரிவித்தனர்.

 இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

  விருதுநகர் மாவட்டத்தில் திருத்தங்கல் நகர் ஒரு வளர்ந்துவரும் நகராகும். நகரில் தீப்பெட்டி, அச்சுத் தொழில் உள்ளிட்ட பல தொழில்கள் நடைபெற்று வருகின்றன.திருத்தங்கல் நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பின்னர், பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

  பொதுமக்கள் கோரிக்கையை முதல்வருக்கு அனுப்பி வைத்தோம். பின்னர், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் திருத்தங்கலில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தினார். இதையடுத்து, திருத்தங்கல்-விருதுநகர் சாலையில் கருப்பசாமி கோவிலருகே நகராட்சிக்குச் சொந்தமான 1.54 ஏக்கர் பரப்பளவில் சி கிளாஸ் பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

  இதையடுத்து, அதற்கான வரைபடம் தயாரித்து மதுரை நகர் ஊரமைப்பு துணை இயக்குநரால் ஒப்புதல் பெறப்பட்டது. பஸ் நிலையம் அமைக்கத் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. மதிப்பீட்டுத் தொகை ரூ. 3.69 கோடி. பஸ் நிலையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீட்டுத் தொகையை அரசிடம் பெற நகராட்சி நிர்வாக ஆணையரகத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.

   இதைத் தொடந்து, புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு முதல்வரால் மானியக் கோரிக்கையில் உத்தரவு வழங்கப்பட்டது. அதன்படி, நகராட்சியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு மதிப்பீட்டுத் தொகை ரூ. 3.69 கோடி நிர்வாக அனுமதி பெறுவதற்கு நகராட்சி நிர்வாக ஆணையாளர் (சென்னை)க்கு பிரேரணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விரைவில் பஸ் நிலையம் அமைக்க பணிகள் தொடங்கப்படும் என்றனர்.