Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு

Print PDF

தினகரன்              19.06.2013  

அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகாபரமசிவம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர் உத்தரவுப்படி கடந்த 2003ம் ஆண்டு தமிழகம் முழுவதும் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்புத்திட்டம் அமல்படுத்தப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. அதேபோல் தற்போது தமிழக முதல்வர் தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை குடியிருப்பு மற்றும் வணிக வளாகம், தொழிற்சாலைகள் ஆகிய இடங்களில் அமைத்து அதன்மூலம் நிலத்தடிநீரை உயர்த்தி பொதுமக்கள் பயனடைய தெரிவித்துள்ளார்.

அதன்படி ஈரோடு மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிகவளாகங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உடனடியாக பருவமழைக்கு முன்னதாக அமைக்க வேண்டும். மேலும் குளம், குட்டைகளில் நீர்பிடிப்பு பகுதிகளை சுத்தம் செய்து மழைநீர் சேகரிப்பு செய்ய மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மேயர் தெரிவித்துள்ளார்.