Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஈரோடு மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினத்தந்தி               15.06.2013

ஈரோடு மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு பேரூராட்சிகளில் மழை நீர் சேகரிப்பு ஊர்வலம் நடைபெற்றது.

சிவகிரி

சிவகிரி பேரூராட்சியின் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் பரமு என்கிற ஆறுமுகம் தொடங்கிவைத்தார். சிவகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ–மாணவிகள் ஊ£ர்வலத்தில் கலந்துகொண்டு மழைநீர் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

ஊர்வலத்தில் செயல் அதிகாரி தங்கவேல், கவுன்சிலர் சண்முகசுந்தரம், முன்னாள் கவுன்சிலர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.

சென்னசமுத்திரம்

சென்னசமுத்திரம் பேரூராட்சி சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு பேரூராட்சி தலைவி சுசீலா சண்முகம் தலைமை தாங்கினார். சாலைப்புதூர் தொடக்கப்பள்ளி மாணவ–மாணவிகள் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கோஷங்கள் முழங்கியவாறு ஊர்வலத்தில் சென்றார்கள்.

ஊர்வலத்தில், பேரூராட்சி செயல் அதிகாரி மகேந்திரன், கவுன்சிலர்கள் வெற்றிவேல், சண்முகம், தலைமை ஆசிரியர் சண்முகம் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்.

கொடுமுடி

கொடுமுடி பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். கொடுமுடி எஸ்.எஸ்.வி. தொடக்கப்பள்ளி மாணவ–மாணவிகள் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கோஷங்கள் முழங்கியபடி சென்றார்கள். பேரூராட்சி செயல் அதிகாரி பழனிச்சாமி, துணை தலைவர் மனோகரன், கவுன்சிலர்கள் வெண்ணிலா பாலு, பழனியப்பன், பாஸ்கரன், தலைமை ஆசிரியர் திலகம் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே உள்ள கே.என்.பாளையம் பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு பேரூராட்சி தலைவர் கே.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் செயல் அதிகாரி மா.சம்பத்துநாயுடு மற்றும் அதிகாரிகள், ஊர்ப்பெதுமக்கள், பள்ளிக்கூட மாணவர்கள் இதில் கலந்த கொண்டனர்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்து தொடங்கி ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று பெருமாள் கோவில் அருகே முடிவடைந்தது.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை பேரூராட்சி சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை அம்மாபேட்டை பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் தொடங்கிவைத்தார். பெரியசாமி நடுநிலைப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

ஊர்வலத்தில் பேரூராட்சி துணைத்தலைவர் சுந்தரராசன், இளநிலை உதவியாளர் ராஜமூர்த்தி, கவுன்சிலர்கள் ராஜேந்திரன், கருப்பணன், ஜெயக்குமார், முருகேசன், சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.

நெரிஞ்சிப்பேட்டை

நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி சார்பில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை செயல் அதிகாரி ஹேமலதா தொடங்கி வைத்தார். நெரிஞ்சிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஊர்வலத்தில் கலந்துகொண்டு, மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

ஊர்வலத்தில், பேரூராட்சி கவுன்சிலர்கள் என்.ஆர்.ராசு, சங்கீதா உள்பட பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலக உதவியாளர்கள் கலந்துகொண்டார்கள்.

ஆப்பக்கூடல்

ஆப்பக்கூடல் பேரூராட்சி சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் ராமச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். ஆப்பக்கூடல் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூட மாணவ–மாணவிகள் ஊர்வலத்தில் கலந்துகொண்டு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினார்கள்.

ஊர்வலத்தில் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டார்கள். முடிவில் செயல் அதிகாரி கருப்பண்ணன் நன்றி கூறினார்.