Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளிலும் விரைவில் பாதாள சாக்கடை பணி

Print PDF
தினகரன்                 22.05.2013

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளிலும் விரைவில் பாதாள சாக்கடை பணி


கோவை, :  விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளிலும் பாதாள சாக்கடை பணி துவக்கப்படும் என கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவையில் நேற்று நடந்த மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம்:

கோவை மாநகராட்சியில் முன்பிருந்த 72 வார்டுகளிலும், மத்திய அரசின் ஜே.என்.என்.யு.ஆர்.எம் திட்டத்தின்கீழ் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை, 650 கி.மீ தூரத்துக்கும் அதிகமாக பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பணி நடந்து வருகிறது. அடுத்து, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், ஒரு கிராம பஞ்சாயத்து என 11 உள்ளாட்சி அமைப்புகளிலும் பாதாள சாக்கடை திட்டப்பணி துவங்க உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிவால் வாரியம் மேற்கொண்ட ஆய்வுப்பணிக்கு கட்டணமாக ரூ.60.37 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது. இதில், ரூ.43.49 லட்சத்தை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் ஏற்கனவே செலுத்திவிட்டன. மீதமுள்ள தொகை மாநகராட்சி சார்பில் செலுத்தப்படும். விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்) தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதல் பெற்று, இப்பகுதியிலும் பாதாள சாக்கடை பணி விரைவில் துவக்கப்படும்.

இதுபற்றி மேயர் செ.ம .வேலுசாமி கூறுகையில், ‘‘பாதாள சாக்கடை பணி 100 சதவீதம் நிறைவடைந்தால் சாக்கடை நீர் வெளியே தெரியாது. அனைத்தும் பூமிக்குள் கொண்டுசெல்லப்பட்டு, அந்தந்த பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு சென்றுவிடும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குடிநீராகவும், மீதமுள்ள திடக்கழிவை உரமாகவும் பயன்படுத்தப்படும். அத்துடன், நகரில் சாக்கடை நீர் கண்ணுக்கு தெரியாத காரணத்தால் இனி கொசுத்தொல்லையும் இருக்காது. சுகாதார சீர்கேடும் ஏற்படாது. பாதாள சாக்கடை பணி முடிவடையும் வரை சாலைகள் உடைக்கப்படுவதை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். பணி முடிவடைந்தவுடன் சாலைகள் வழக்கம்போல் சீரமைக்கப்படும்’’ என்றார்.