Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நல்லூர் நகராட்சிக்கு ரூ.7.79 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமணி 17.09.2009

நல்லூர் நகராட்சிக்கு ரூ.7.79 லட்சம் ஒதுக்கீடு

திருப்பூர், செப்.16: 12-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் நல்லூர் நகராட்சிக்கு ரூ.7.79 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது. இத்தொகைக்கான பணிகள் செய்வது குறித்து புதன்கிழமை நகர்மன்ற ஒப்புதல் பெறப்பட்டன.

நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவுப்படி 2009-10-ம் ஆண்டில் 12-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் முதல் தவணையாக நல்லூர் நகராட்சிக்கு ரூ.7 லட்சத்து 79 ஆயிரத்து 715 ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

இதில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.4.50 லட்சம் மதிப்பில் 9 கன்டெய்னர்கள் வாங்கப் பட உள்ளன. சாலை மற்றும் வடிகால் மேம்பாட்டு திட்ட த்தின் கீழ் மாநகராட்சி 12-வது வார்டு என்எம்பி நகர் முதல் வீதிக்கு ரூ.3.70 லட்சம் மதிப்பில் தார்தளம் அமைக்கப்பட உள்ளது.

மேலும் கணிப்பொறி மற்றும் மின்கட்டண பயன்பாட்டு திட்டத்தின் கீழ் நல்லூர் நகராட்சி மின் பயன்பாட்டு கட்டணமும் செலுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை போக கூடுதலாக ஆகும் செலவினங்களுக்கு நகராட்சி பொதுநிதியிலிருந்து ஈடுசெய்யப்பட உள்ளது.

இதற்கு நகர் மன்ற அனுமதி பெறுவது குறித்து நகர் மன்றத் தலைவர் ஜி.விஜயலட்சுமி தலைமையில் புதன் கிழமை நடந்த நல்லூர் நகராட்சி கூட்டத்தில் ஒப்புத லுக்கு வைக்கப்பட்டது. அதற்கு நகர்மன்ற உறுப்பினர் கள் ஒப்புதல் தெரிவித்ததை அடுத்து தீர்மானம் நிறை வேற் றப்பட்டது. இதுதவிர மொத்தம் 80 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகர்மன்ற துணைத்தலைவர் ஜே.நிர்மலா, செயல் அலுவ லர் அண்ணாமலை பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 17 September 2009 05:52