Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பல்லடம் நகராட்சியில் ரூ.12.71 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் உபரி வருவாய் ரூ.2.6 கோடி

Print PDF
தினகரன்        30.03.2013

பல்லடம் நகராட்சியில் ரூ.12.71 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் உபரி வருவாய் ரூ.2.6 கோடி


பல்லடம்: பல்லடம் நகராட்சியின் சாதாரணக்கூட்டம் நகராட்சி மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சித்தலைவர் சேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணைத்தலைவர் பழனிச்சாமி,ஆணையாளர் சாந்தகுமார் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

சித்ராதேவி (அ.தி.மு.க.)நகராட்சிப்பகுதிகளில் பல இடங்களில் புதிதாக பெயர்பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் எனது வார்டுக்குட்பட்ட சேடபாளையம் பகுதியில் பெயர்ப்பலகை வைக்கப்படவில்லை.  தலைவர்  திட்டப்பணிகள் செய்யப்பட்ட சாலைகளுக்கு மட்டுமே பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் வைக்கப்படவில்லை. பெயர்ப்பலகை வைக்காததால் சேடபாளையம் எங்கு இருக்கிறது என்றே பலருக்கு தெரியவில்லை. அப்படியிருக்கும்போது எனது வார்டுக்குத்தான் முதல் உரிமை கொடுத்திருக்கவேண்டும் .
தலைவர்:அடுத்த கூட்டம் நடப்பதற்கு முன்பு கண்டிப்பாக வைக்கப்படும்.

சித்திக்(தி.மு.க) நகராட்சி 18 வார்டுகளிலும் நல்ல குடிநீர் பிரச்னை நிலவுகிறது. உடனடியாக சரிசெய்யவேண்டும். என்.ஜி. ஆர் ரோடு அகலப்படுத்தியும் வாகனங்கள் தன் இஷ்டம் போல் நிறுத்தி வைக்கப்படுவதால் நெரிசலாக உள்ளது.

ஒழுங்குபடுத்தவேண்டும். நகராட்சி குப்பைகளை கிணறுகளில் கொட்டிவருகிறோம். இது நிரந்தர தீர்வு இல்லை. நிரந்தர தீர்விற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தலைவர் சேகர்:  விரைவில் தீர்வு காணப்படும்.

பேபி(ம.தி.மு.க): பி.டி.ஓ.காலனியில் உள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றித்தரவேண்டும் அதுபோல் மங்கலம் ரோட்டில் சாக்கடை கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு,தேங்கி நிற்கிறது நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

பின்னர் பல்லடம் நகராட்சியின் 2013-14 ம் ஆண்டிற்கான வரவு செலவுதிட்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மொத்த வருவாய் ரூ.12 கோடியே 71 லட்சம்,செலவினங்கள் ரூ.10 கோடியே 65 லட்சம்.உபரி ரூ.2 கோடியே ஆறு லட் சம்.கடந்த ஆண் டைவிட இந்த ஆண்டு  உபரி  வருவாய்  ஒரு கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.