Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பள்ளபட்டி பேரூராட்சி 18 வார்டுகளில் குடிநீருக்காக ரூ. 40 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு மற்றும் மோட்டார் பம்புகள் அமைப்பு

Print PDF
தினமணி         26.03.2013

பள்ளபட்டி பேரூராட்சி 18 வார்டுகளில் குடிநீருக்காக ரூ. 40 லட்சத்தில்  ஆழ்குழாய் கிணறு மற்றும் மோட்டார் பம்புகள் அமைப்பு


கடந்த ஒன்னரை ஆண்டுகளில் பள்ளபட்டி பேரூராட்சியில் குடிநீர் திட்ட பணிக்காக ரூ. 40 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு மற்றும் மோட்டார் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார் பேரூராட்சி தலைவர் சி.ஏ.சையது இப்ராஹீம்.

மேலும், இது தொடர்பாக பேரூராட்சி தலைவர் சி.ஏ.சையது இப்ராஹீம் கூறியதாவது, கரூர் மாவட்டம் பள்ளபட்டி பேரூராட்சியில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு மக்களின் நலன் கருதி தமிழகத்தை ஆட்சி செய்யும் அதிமுக அரசு பேரூராட்சிக்கு பல்வேறு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கி வருகின்றது.

இதை பயன்படுத்தி பள்ளபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொறுப்பேற்ற ஒன்னரை ஆண்டுகளில் குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளித்து ஆழ்குழாய் கிணறு, சின்டெக்ஸ் தொட்டி மற்றும் மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பதற்காக ரூ. 40 லட்சம் செலவிடப்பட்டுள்ளது என்றார்.

இதைதொடர்ந்து 14வது வார்டு, 6வது வார்டு, 13வது வார்டு, 7வது வார்டு போன்ற பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய சின்டெக்ஸ் தொட்டியில் மற்றும் மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பதை மக்கள் சேவைக்காக பேரூராட்சி தலைவர் சி.ஏ.சையது இப்ராஹீம் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கிருஸ்ணசாமி, உறுப்பினர்கள் ஓ.எம்.முபாரக்அலி, லியாகத்அலி, சர்மிளா, ஜாஹீர் அபுதாஹீர் மற்றும் அன்வர்அலி, தங்கராஜ், வீராச்சாமி, மன்சூர்அலி, பி.எஸ்.காஜாமைதீன், அகமது சரீப், சேட், ஜெயசுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.