Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவொற்றியூரில் வளர்ச்சித் திட்டங்கள் விரைவில் நிறைவேறும்

Print PDF

தினமணி 03.09.2009

திருவொற்றியூரில் வளர்ச்சித் திட்டங்கள் விரைவில் நிறைவேறும்: அமைச்சர் கே.பி.பி. சாமி

திருவொற்றியூர், செப். 2: திருவொற்றியூர் நகர வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படுமென அந்த தொகுதி எம்.எல்.-வும், மீன் வளத்துறை அமைச்சருமான கே.பி.பி. சாமி தெரிவித்துள்ளார்.

திருவொற்றியூர் நகராட்சி அலுவலகத்தை ஒட்டி ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நீச்சல் குளம், ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா ஆகியவற்றின் திறப்புவிழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கே.பி.பி. சாமி பேசியது:

சுமார் 2.75 லட்சம் பேர் வசிக்கும் இந்நகருக்கு போதிய அளவு வசதிகள் இல்லை. இதனை கருத்தில் கொண்டுதான் இத்தகைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

திருவொற்றியூர் பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி பள்ளி நடைபயிற்சி பாதை விரைவில் நவீனப்படுத்தப்படவுள்ளது. நகராட்சி மருத்துவமனை கட்டடங்கள் தற்போது இடிக்கப்பட்டு வருகின்றன. அதே இடத்தில் அனைத்து வசதிகளும் அடங்கிய புதிய மருத்துவமனை அமைய உள்ளது.

கோமாதா நகர் அருகே ரயில்வே மேம்பாலம், அண்ணாமலைநகர், விம்கோ நகர் ஆகிய இடங்களில் ரயில்வே சுரங்க பாலம் அமைக்கப்படவுள்ளது.

ரூ. 95 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் திருவொற்றியூர் நகர குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், அரசு கலைக் கல்லூரி ஆகிய திட்டங்கள் நிறைவேறும்போது வளர்ச்சியடைந்த நகரங்களுள் ஒன்றாக திருவொற்றியூர் மாறும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் ராமநாதன், நகராட்சி ஆணையர் கலைவாணன், தி.மு.. நகர செயலாளர் தி.மு. தனியரசு, கவுன்சிலர்கள் சொக்கலிங்கம், பாலயோகேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.