Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போக்குவரத்து செயல்பாட்டுக்கு 10 நகராட்சிகளுக்கு ரூ. 2.5 கோடி மானியம்

Print PDF

தினகரன்       21.01.2011

போக்குவரத்து செயல்பாட்டுக்கு 10 நகராட்சிகளுக்கு ரூ. 2.5 கோடி மானியம்

சென்னை, ஜன. 21:

கடந்த ஆண்டில் போக்குவரத்து செயல்பாடு, மேலாண்மை திட்டத்தின் மூலம் 10 நகராட்சிகளுக்கு ரூ. 2.50 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:

மாநிலத்தின் மாநகரங்கள், நகரங்களில் தற்போதுள்ள நடைமுறைகளை ஆராய்ந்து, நீண்டகால தேவைகளை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலை நீக்கி சீரான முறையில் ஏற்படுத்த நகர் ஊரமைப்பு துறையால் போக்குவரத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய 5 மாநகரங்களும், 58 நகரங்களுக்கும் போக்குவரத்து செயல்பாடு மற்றும் மேலாண்மை திட்டங்களையும் நகர் ஊரமைப்பு துறை தயாரித்துள்ளது.

இந்த திட்டங்களை அந்தந்த உள்ளாட்சியே செயல்படுத்த போதிய நிதி வசதி இல்லாதிருக்கும் நிலையில் ஊரமைப்பு நிதியிலிருந்து மானியமாக நிதி வழங்கி திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்படி, திட்ட மதிப்பீட்டில் 75 சதவீத தொகை நகர் ஊரமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து மானியமாகவும், மீதம் 25 சதவீத தொகை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி தனது சொந்த நிதியிலிருந்தும் செலவு செய்ய வேண்டும். அதிகபட்ச மானிய தொகையாக மாநகராட்சி ஒன்றுக்கு ரூ. 50 லட்சமாகவும், ஒரு நகராட்சிக்கு ரூ. 25 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகர் ஊரமைப்பு துறையால் கடந்த 2009&10 ஆண்டில் போக்குவரத்து செயல்பாடு மற்றும் மேலாண்மை திட்டத்தின்படி செங்கல்பட்டு, ராஜபாளையம், மயிலாடுதுறை, உடுமலைப்பேட்டை, பட்டுக்கோட்டை, திருப்பத்தூர், பரமக்குடி, சிதம்பரம் உட்பட 10 நகராட்சிகளுக்கு தலா ரூ. 25 ட்சம் வீதம் நகர் ஊரமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து 75 விழுக்காடு மானியமாக மொத்தம் ரூ. 2.50கோடியை அரசு வழங்கியுள்ளது.