Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளுக்கு விரைவில் திறப்பு விழா

Print PDF
தினமலர்       16.12.2010

24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளுக்கு விரைவில் திறப்பு விழா

 
சென்னை: ""சென்னை மாநகராட்சியில்,  24 மணி நேரம் செயல்படும் ஐந்து மகப்பேறு மருத்துவமனை கட்டடங்களை, துணை முதல்வர் ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார்'' என, மேயர் சுப்ரமணியன் கூறினார்.சென்னை மாநகராட்சியில், மண்டலத்திற்கு ஒரு மகப்பேறு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படுத்தும் வகையில், அனைத்து மண்டலங்களிலும், மகப்பேறு மருத்துவமனை கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டை, பெருமாள் பேட்டையில், ஏற்கனவே 24 மணி நேரமும் செயல்படும் மகப்பேறு மருத்துவமனைகள் இருப்பதால், மற்ற எட்டு மண்டலங்களில் மகப்பேறு மருத்துவமனைக்கான புதிய கட்டடங்கள் கட்டும் பணி நடக்கிறது. இதில், அயனாவரம் மண்டலத்தில் யுனைடெட் இந்தியா காலனியில் உள்ள 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டது. தற்போது, புளியந்தோப்பு திருவேங்கடம் தெருவில், நான்கு கோடியே 10 லட்ச ரூபாய் மதிப்பில், 40 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. இந்த கட்டுமான பணிகளை ஆய்வு செய்த மேயர் சுப்ரமணியன் கூறியதாவது: பேசின்பிரிட்ஜ் மண்டலத்தில் சஞ்சீவராயன்பேட்டை, கீழ்ப்பாக்கம் மண்டலத்தில் புல்லா அவென்யூ, கோடம்பாக்கம்  மண்டல அலுவலகம் அருகிலும், அடையாறு வெங்கட ரத்தினம் நகரிலும், திருவல்லிக்கேணியில் மீர்சாகிப் பேட்டை ஆகிய ஐந்து இடங்களில் கட்டப்படும், 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை கட்டடங்கள் கட்டுமானப் பணிகள், முடியும் தறுவாயில் உள்ளது. இந்த கட்டடங்களை துணை முதல்வர் ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார். புளியந்தோப்பு மண்டலத்தில், திருவேங்கடம் தெருவில் கட்டப்படும் மருத்துவமனை கட்டடம் மற்றும் சைதாப்பேட்டை மகப்பேறு மருத்துவமனையில், கூடுதலாக கட்டப்படும் கட்டடங்களின் கட்டுமானப் பணிகள், ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்கப்படும். இவ்வாறு மேயர் கூறினார்.