Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

2900 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ15.70 கோடி நிதி மு.க.ஸ்டாலின் 135 நிமிடங்கள் வழங்கினார்

Print PDF

தினகரன்                    16.11.2010

2900 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ15.70 கோடி நிதி மு..ஸ்டாலின் 135 நிமிடங்கள் வழங்கினார்

சென்னை, நவ. 16: சென்னையில் 2900 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ15.70 கோடி சுழல் நிதியை துணை முதல்வர் மு..ஸ்டாலின் இரண்டே கால் மணி நேரம் வழங்கினார். இதுவரை 101 மணி நேரம் 45 நிமிடங்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி வழங்கி அவர் சாதனை புரிந்துள்ளார்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் விழா சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று மாலையில் நடந்தது. துணை முதல்வர் மு..ஸ்டாலின் விழாவில் 2900 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ15.70 கோடி சுழல் நிதி வழங்கினார். மகளிர் திட்டம் மூலம் தொழில் பயிற்சி மேற்கொண்டுள்ள 100 பேருக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் பணி நியமன ஆணையும் வழங்கினார்.

விழாவில் மு..ஸ்டாலின் பேசியதாவது:

இந்த விழாவில் 1700 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ60 ஆயிரம் வீதம் ரூ10.20 கோடி மானியத்துடன் கூடிய சுழல் நிதி, சொர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 1200 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ5.50 லட்சம் மானியத்துடன் கூடிய சுழல் நிதி, 100 தனி நபர்களுக்கு கடன் உதவியாக ரூ20.47 லட்சம் வழங்கப்படுகிறது.

இங்கே பேசிய தலைமை செயலர் மாலதி அரங்கத்தின் முதல் 2 வரிசைகளிலும் ஆண்கள் இருப்பதை குறிப்பிட்டார். ஆண்கள் முதல் வரிசையில் தான் இருக்கிறார்கள். முதல் இடத்தில் இருப்பது பெண்கள் தான். அரசின் தலைமை செயலர் பொறுப்பில் இருப்பவர் பெண். டி.ஜி.பி. பெண். அந்த அளவு இந்த ஆட்சியில் பெண்கள் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. .நா. சபையின் முதல் பெண் தலைவர் விஜயலட்சுமி பண்டிட், முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு, முதல் பெண் எம்.எல்.சி. முத்துலட்சுமி ரெட்டி, முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி, சமூக தொண்டுக்காக பாரத ரத்னா பெற்ற முதல் பெண் அன்னை தெரசா என்று பெண்கள் பெருமையை கூறிக் கொண்டே போகலாம்.

2006 தி.மு.. ஆட்சியில் 99245 நகர்ப்புற குழுக்களுக்கு ரூ99.25 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை சுழல்நிதி பெற்ற குழுக்கள் 4,17,568 ஆகும். 21.83 லட்சம் மகளிர் உறுப்பினர்களுக்கு, 1 லட்சத்து 58,876 குழுவினருக்கு நேரடியாக நான் நிதி வழங்கி இருக்கிறேன். 90 இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் இதை வழங்கியிருக்கிறேன்.

சம்பிரதாயத்துக்கு 10 பேர் 20 பேருக்கு வழங்காமல் அனைவருக்கும் நான் நிதி வழங்குவதை இங்கே குறிப்பிட்டார்கள். நேரடியாக நான் நிதி வழங்குவதற்காக இதுவரை நான் செலவிட்ட நேரம் 99 மணி 30 நிமிடங்கள் நேரம் ஆகும். இன்று வழங்கும் நேரத்தையும் சேர்த்தால் சதம் அடித்து விடுவேன். நான் சுழன்று சுழன்று நிதி வழங்குவதாக கூறினார்கள். அதற்கு நீங்கள் தரும் உற்சாகம், ஊக்கம் தான் காரணம்.

1989ல் மகளிர் சுயஉதவிக் குழு தி.மு.. ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்த குழு தொடங்கப்பட் டது அரசியலுக்காக அல்ல. தேர்தல் நேரத்தில் பயன்படுத்தும் குறுகிய நோக்கத்துடன் அல்ல. பெண்கள் சுயமாக சிந்தித்து வாழ்க்கை நடத்த வேண்டும். சுயமரியாதையோடு வாழ வேண்டும். சொந்த காலில் நிற்க வேண்டும். சுயதொழில் தொடங்க நிதி தேவை. குறைந்த வட்டியில் வங்கி கடன் பெறவே இந்த குழு. இது கம்பீரமாக வளர்ந்து இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது.

இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் 99 சதவீத மகளிர் சுயஉதவிக் குழுவினர் கடனை முறையாக திருப்பி செலுத்துவதாக வங்கி அதிகாரிகள் கூறுகிறார்கள். இது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை. கருணாநிதி முதல்வராக இருக்கும் போதெல்லாம் மகளிர் முன்னேற்றம் அடைகிறார்கள்.

பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டும் என்று பெரியார் கொண்டு வந்த தீர்மானத்தை முதல்வர் கருணாநிதி சட்டமாக நிறைவேற்றினார். வேலை வாய்ப்பில் மகளிருக்கு 30 சதவீதம், உள்ளாட்சிகளில் 33 சதவீதம், கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி, விதவை மறுவாழ்வு திட்டம், திருமண நிதி உதவி திட்டம் வழங்கப்படுகின்றன. கடந்த ஆட்சியில் அவை நிறுத்தப்பட்டன. தி.மு.. ஆட்சியில் அவை மீண்டும் வழங்கப்படுகின்றன. பெண்கள் முன்னேற்றத்துக்காக பாடுபடும் கருணாநிதி ஆட்சிக்கு நீங்கள் என்றும் துணை நிற்க வேண்டும். இவ்வாறு மு..ஸ்டாலின் பேசினார்.

தொடர்ந்து துணை முதல்வர் மு..ஸ்டாலின் இரண்டே கால் மணி நேரம் நின்றபடி 2900 பெண்களுக்கும் நிதி வழங்கினார். ஏற்கனவே வழங்கிய 99 மணி நேரம் 30 நிமிடங்களுடன் இன்று வழங்கிய நேரத்தையும் சேர்த்தால் அவர் 101 மணி 45 நிமிடம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நிதி வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவுக்கு மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நீண்ட நேரம் நின்றபடி நிதி வழங்கி துணை முதல்வர் மு..ஸ்டாலின் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார் என்றார்.