Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாவட்டம் முழுவதும் 1450 புதிய மகளிர் குழு இலக்கு இம்மாதம் இறுதிக்குள் அமைக்க தீவிரம்

Print PDF

தினகரன்                 10.09.2010

மாவட்டம் முழுவதும் 1450 புதிய மகளிர் குழு இலக்கு இம்மாதம் இறுதிக்குள் அமைக்க தீவிரம்

ஈரோடு, நவ. 10: ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண் டில் புதிதாக 1,450 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அமை க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை மகளிர் குழுக்கள் 92 கோடி ரூபாய் சேமிப்பு தொகையாக வைத்துள்ளனர்.

பெண்கள் சமூகத்தில் பொருளாதார வளர்ச்சியுடன் திகழ வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 1998ம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திட்டம் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் ஊரக பகுதியில் 10,563 மகளிர் சுயஉதவிக்குழுக்களும், நகர்ப்புற பகுதிகளில் 5,579 மகளிர் குழுக்களும் என 16,142 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் 8 அரசு சாரா தொ ண்டு நிறுவனங்கள் மற்றும் கூட்டமைப்புகள் உதவியுடன் செயல்பட்டு வரு கிறது. இந்த குழுக்களில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 630 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த செப்டம்பர் வரை இந்த குழுக்கள் மூலமாக 92 கோடியே 46 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் சேமிப்பாக உள்ளது. 2010&11ம் ஆண்டில் கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 1,450 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் இம்மாதம் இறுதிக்குள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 949 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 1,380 கிராம மற்றும் நகர்ப்புற பகுதி மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் 710 குழுக்களுக்கு ரூ.4.26 கோடி சுழல்நிதி மானியம் மற்றும் வங்கி கடனாக வழங்கப்பட்டுள் ளது. பொன்விழா கிராமப்புற சுயவேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் கிராமப்பகுதிகளில் 276 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு பொருளாதார கடன் மானி யம் வழங்கு குறியீடு பெறப்பட்டு இதில் 148 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு 2 கோடியே 57 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும், 531 பேருக்கு உடல், ஊனமுற்றோர் மற்றும் தனிநபர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதில் 44 பேருக்கு ரூ.3.30 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 6,834 சுயஉதவிக் குழுக்களுக்கு 88 கோடி ரூபாய் வங்கிகள் மூலம் கடன் வழங்க குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டதில் இதுவரை 2,950 குழுக்களுக்கு 35 கோடியே 32 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்திறன் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.