Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொள்ளாச்சியில் உள்ளாட்சி தின விழா சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி

Print PDF

தினமலர்                 02.11.2010

பொள்ளாச்சியில் உள்ளாட்சி தின விழா சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில் உள்ளாட்சி தினத்தை ஒட்டி மகளிர் சுய உதவிக்குழுக் களுக்கு சுழல் நிதி வழங்கப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி உள்ளாட்சி தினத்தை ஒட்டி மகாலிங்கபுரம் சர்க்கஸ் மைதானத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகராட்சி தலைவர் ராஜேஸ்வரி, கமிஷனர் பூங்கொடி அருமைக்கண் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். சுகாதாரம், மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுவினரும், துப்புரவு தொழிலாளர்களும் அறிவிப்புகளை ஏந்தி பேரணியாக சென்றனர். நியூஸ்கீம் ரோடு, காந்திசிலை, பஸ் ஸ்டாண்ட் ரோடு வழியாக சென்ற பேரணி நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

நகராட்சி அலுவலகத்தில் நடந்த உள்ளாட்சி தினவிழாவில், கமிஷனர் வரவேற்றார். நகராட்சிக்கு சொந்தமான நாச்சிமுத்து மகப்பேறு மருத்துவமனையில் 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவீன அறுவை சிகிச்சை அரங்கு, 26.5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டடப்பட்ட நவீன ஆடுவதைக்கூடம் ஆகியவற்றை நகராட்சி தலைவர் திறந்து வைத்தார். நகராட்சி பகுதிகளுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டத்தை முன்னாள் எம்.எல்.., ராஜூ துவக்கி வைத்தார்.

நான்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சுழல் நிதியாக வழங்கப்பட்டது. மகப்பேறு உதவி திட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் 25 பேருக்கு 1.25 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களுக்கு பரிசும், சான்றும் வழங்கப்பட்டது. விழாவில், நகராட்சி பொறியாளர் மோகன், நகரமைப்பு அலுவலர் வரதராஜன், நகர் நல அலுவலர் குணசேகரன், தி.மு.., காங்., கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.