Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

200 பெண்களுக்கு மகப்பேறு உதவித் தொகை

Print PDF

தினமணி 21.10.2010

200 பெண்களுக்கு மகப்பேறு உதவித் தொகை

மதுரை, அக். 20: மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு நாள் முகாமில் 200 பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் தொகையை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் வழங்கினார்.

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.. அழகிரி உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து சிறப்பு மக்கள் தொடர்பு நாள் முகாம்களை நடத்தி வருகின்றன. மதுரை கோ.புதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை இம்முகாம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் பேசுகையில், முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் தகுதியான மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

முகாமில் மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் பேசுகையில், மக்களைத் தேடி என்ற இச்சிறப்பு மக்கள் தொடர்பு நாள் முகாம் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகளை மனுக்களாகப் பெற்று வருகிறோம். அலுவலர்கள் அனைவரும் மக்களைத் தேடிச் சென்று மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

இச்சிறப்பு முகாமில் 200 நபர்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறுஉதவித் தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி முன்னிலை வகித்தார். துணை மேயர் பி.எம். மன்னன், மாநகராட்சி துணை கமிஷனர் தர்ப்பகராஜ், வடக்கு மண்டலத் தலைவர் க.இசக்கிமுத்து, நகர் நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியன், வடக்கு வட்டாட்சியர் அர்ச்சுனன், மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ரா. பாஸ்கரன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ரா.அண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.