Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இணையதளத்தில் சொத்துவரி விவரங்கள்: மாநகராட்சிக்கு தொழில் வர்த்தக சங்கம் நன்றி

Print PDF

தினமணி 18.08.2009

இணையதளத்தில் சொத்துவரி விவரங்கள்: மாநகராட்சிக்கு தொழில் வர்த்தக சங்கம் நன்றி

மதுரை, ஆக. 17: சொத்துவரி விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டு வெளிப்படையான தன்மையை ஏற்படுத்தியுள்ள மதுரை மாநகராட்சி ஆணையருக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் முதுநிலைத் தலைவர் எஸ். ரத்தினவேல் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பல கட்டடங்களுக்கு சொத்துவரி விதிக்கப்படவில்லை அல்லது மிகக் குறைவாக விதிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு மாநகராட்சியின் மீது பல்வேறு தரப்பினரால் கூறப்பட்டுவந்தது.

இனி அவ்வாறான குற்றச்சாட்டுகள் இருந்தால் நேரடியாகவே சம்பந்தப்பட்ட சொத்து குறித்த தக்க விவரங்களுடன் மாநகராட்சியின் கவனத்துக்குக் கொண்டுவர பொதுமக்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

இந்நிலையில், ஏற்கெனவே தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளபடி, சொத்துவரி உயர்வில் உள்ள முரண்பாடுகளை நீக்கி, வரிவிதிப்பைக் குறைத்து சீரமைக்கவேண்டும் என்று ரத்தினவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

Last Updated on Tuesday, 18 August 2009 05:02