Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஏர் இந்தியா, ஹில்வியூ குடியிருப்புக்களில் ஸி2.07 கோடி செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

Print PDF

தினகரன் 16.08.2010

ஏர் இந்தியா, ஹில்வியூ குடியிருப்புக்களில் ஸி2.07 கோடி செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

புதுடெல்லி, ஆக.16: டெல்லியில் உள்ள ஏர் இந்தியா மற்றும் ஹில்வியூ குடியிருப்புக்களில் ரூ.2.07 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி நேற்று முதல் தொடங்கப்பட்டது.

டெல்லியின் முக்கிய பகுதியான ஏர் இந்தியா குடியிருப்பு, ஹில்வியூ அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் முனிர்க்£ என்கிளேவ் ஆகிய பகுதிகள் குடிநீர் வசதி இல்லாமல் தவித்து வந்தன. அந்த பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

எனினும், போதுமான குடிநீர் வசதி கிடைக்காமல் அந்தப் பகுதியினர் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் அந்த பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க முதல்வரும் டெல்லி குடிநீர் வாரிய தலைவருமான ஷீலா தீட்சித் திட்டமிட்டார். அதற்காக மான் பூங்கா பாதுகாக்கப்பட்ட குடிநீர் தேக்கத்தில் இருந்து குழாய் மூலம் அந்த பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்காக ரூ.2.07 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டன. மொத்தம் 4,350 மீட்டர் தூரம் குழாய்கள் பதிக்கப்பட்டு அந்தப் பகுதிகளுக்கு சுத்திகரிப்பு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டது.

பணிகள் அனைத்தும் முடிந்து அந்த பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் நேற்று முதல் தொடங்கியது. இதனால் அந்தப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 8,000 பேர் பயன் அடைவார்கள்.