Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரிசர்வ் வங்கி திட்டம் டிசம்பர் மாதத்துக்குள் ^10 பிளாஸ்டிக் நோட்டு

Print PDF

தினகரன் 12.08.2010

ரிசர்வ் வங்கி திட்டம் டிசம்பர் மாதத்துக்குள் ^10 பிளாஸ்டிக் நோட்டு

புதுடெல்லி, ஆக. 12: நடப்பு ஆண்டு இறுதிக்குள் பிளாஸ்டிக்கால் ஆன 10 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்று ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் உயரதிகாரி ஒருவர் கூறிய விவரம் வருமாறு:

முதலில் பிளாஸ்டிக்கால் ஆன 10 ரூபாய் நோட்டுகளை தயாரித்து ஆண்டு இறுதிக்குள் மக்களிடையே புழக்கத்தில் விட திட்டமிடப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் விடப்படும்.

மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படும் பிளாஸ்டிக் கரன்சிகள் தற்போது நியூசிலாந்து, இலங்கை, மலேசியா, ஹாங்காங் நாடுகளில் புழக்கத்தில் உள்ளன.

பிளாஸ்டிக்கால் ஆன 10 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வினியோகம் செய்யும் போது ஆகும் செலவுகளை ஒப்பிட்டு பார்த்த பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கையாக வேறுவகை நோட்டுகள் அச்சிட முடிவு செய்யப்படும். இந்தியாவில் தாளால் ஆன ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருகிறது. இது தண்ணீரில் பட்டால் ஆயுள் குறைந்துவிடுகிறது. இதற்கு பதிலாக நீண்ட ஆயுள் கொண்ட பிளாஸ்டிக் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும். பிளாஸ்டிக் நோட்டுகளை போலியாக அச்சிட முடியாது என்று அவர் தெரிவித்தார்.