Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வறுமை 4.1 கோடி; வசதி 4.67 கோடி ஏழை குடும்பங்களைவிட வசதியானவர்கள் அதிகம்

Print PDF

தினகரன் 03.08.2010

வறுமை 4.1 கோடி; வசதி 4.67 கோடி ஏழை குடும்பங்களைவிட வசதியானவர்கள் அதிகம்

புதுடெல்லி, ஆக. 3: நம்நாட்டில் ஏழை குடும்பங்கள் எண்ணிக்கையை முதல்முறையாக வசதியான குடும்பங்கள் எண்ணிக்கை மிஞ்சியுள்ளது. இதை தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (என்சிஏஇஆர்) புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது.

2009&10ம் ஆண்டு (மார்ச் 2010) நிலவரப்படி இந்திய குடும்பங்களின் வருமானம் பற்றி என்சிஏஇஆர் விரிவான கணக்கெடுப்பு நடத்தியது. அதில் வெளியான அம்சங்கள் வருமாறு:

2010 மார்ச் நிலவரப்படி நம்நாட்டில் ஏழ்மையில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 4.1 கோடி. அதாவது, ஆண்டுக்கு

ரூ40,000க்கு குறைவாக வருமான உள்ள குடும்பங்கள் இவை. பணக்கார குடும்பங்களின் எண்ணிக்கை 4.67 கோடி. அதாவது, ரூ2 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்கள் இவை. முதல்முறையாக, நாட்டின் ஏழை குடும்பங்கள் எண்ணிக்கையை அதிக வருவாய் கொண்ட குடும்பங்கள் மிஞ்சியுள்ளன. ரூ45,000 முதல்

ரூ1.8 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்கள் நடுத்தர வருவாய் கொண்டவையாக கருதப்படுகின்றன.

இந்த பிரிவில் 14.07 கோடி குடும்பங்கள் இப்போது உள்ளன. இந்தியாவில் உள்ள மொத்த குடும்பங்கள் எண்ணிக்கை சராசரியாக 22.84 கோடி. அதில் பாதிக்கும் மேல் நடுத்தர வருவாய் குடும்பங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது மொத்த குடும்பங்களில் 62 சதவீதம்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய குடும்பங்களின் ஆண்டு வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வந்துள்ளது. 2001ம் ஆண்டில் 18.82 கோடி மொத்த குடும்பங்களில் உயர் வருமானம் கொண்ட குடும்பங்கள் 1.38 கோடி மட்டுமே இருந்தன. அது இப்போது 4.67 கோடியாக உயர்ந்துள்ளது. மாறாக, அப்போது ஏழை குடும்பங்கள் எண்ணிக்கை மிக அதிக அளவாக 6.52 கோடியாக இருந்தது.

நாட்டில் உள்ள ஏர் கண்டிஷன்கள் எண்ணிக்கையில் 53 சதவீதம், நடுத்தர வருவாய் பிரிவினரிடம் இருக்கிறது. மொத்த கிரெடிட் கார்டு எண்ணிக்கையில் 43 சதவீதத்தை இந்த பிரிவினர் வைத்துள்ளதாகவும் புள்ளிவிவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2001ம் ஆண்டில் 18.82 கோடி மொத்த குடும்பங்களில் அதிக வருமானம் கொண்ட குடும்பங்கள் 1.38 கோடி மட்டுமே இருந்தன. அது இப்போது 4.67 கோடியாக உயர்ந்துள்ளது.