நகராட்சியில் 153 பேருக்கு மகப்பேறு நிதி

Tuesday, 22 December 2009 06:21 administrator நாளிதழ்௧ள் - ம௧ளிர் நலம் / மேம்பாடு
Print

தினமணி 22.12.2009

நகராட்சியில் 153 பேருக்கு மகப்பேறு நிதி

திருவள்ளூர், டிச. 21: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் காசோலை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் பொன்.பாண்டியன் தலைமையில் நடந்ததுதிருவள்ளூர் நகரச் செயலர் கா.மு.தயாநிதி முன்னிலை வகித்தார். திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ இஏபி சிவாஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 153 பெண்களுக்கு தலா ரூ.6ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.

÷இந் நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் முத்துராமேஸ்வரன், நகர்மன்ற கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நகர்மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.