சென்னையில், மகளிர் ஸ்பெஷல் ரெயில்: வீடியோ கான்பரன்ஸ் மூலம் மம்தா தொடங்கி வைக்கிறார்- 5-ந்தேதி முதல் ஓடுகிறது

Saturday, 01 August 2009 12:18 administrator நாளிதழ்௧ள் - ம௧ளிர் நலம் / மேம்பாடு
Print

மாலை மலர் 01.08.2009

சென்னையில், மகளிர் ஸ்பெஷல் ரெயில்: வீடியோ கான்பரன்ஸ் மூலம் மம்தா தொடங்கி வைக்கிறார்- 5-ந்தேதி முதல் ஓடுகிறது

சென்னை, ஆக. 1-

சென்னையில் நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் தாம்பரம், வேளச்சேரி, அரக்கோணத்திற்கு மகளிர் சிறப்பு ரெயில் விடப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்தார்.

அதன்படி சென்னையில் மகளிர் சிறப்பு ரெயில் வருகிற 5-ந்தேதி முதல் இயக் கப்படுகிறது. இந்த ரெயிலை டெல்லியில் இருந்த படியே வீடியோ கான்பரன்ஸ் மூலம் மம்தா பானர்ஜி தொடங்கி வைக்கிறார்.